நீர்கொழும்பு South International School 'ஹிஜாப்' தடையை நீக்கியது
- Journalist Mujeeb
- May 22, 2019
- 1 min read

நீர்கொழும்பில் இயங்கி வரும் South International பாடசாலை நேற்று 21.05.2019 ஆசிரியைகளுக்கும் மாணிவகளுக்கும் 'ஹிஜாப்' அணிவதற்கு தடை விதித்து புதிய சீருடை பற்றிய துண்டுப் பிரசுரம் ஒன்றை அப்பாடசாலை வழங்கியிருந்தது. எனினும் Negombo South International School மூலம் வழங்கப்பட்ட முஸ்லிம் மாணவிகளுக்கான புதிய சீருடை பற்றிய துண்டுப் பிரசுரம் அந்த பாடசாலை உயர்மட்டத்துக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்ததைத் அடுத்து மீண்டும் பழைய முறையிலேயே மாணவிகள் தலையை மறைத்து ஆடை அணிய முடியும் என கல்லூரியின் முகநூல் பக்கத்தில் இன்று பதிவு வெளியாகியுள்ளதுடன் அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் சிலரும் தெரிவித்தனர். எனவே வழமைபோன்று முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்தபடி கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என குறித்த சர்வதேச பாடசாலை தெரிவிக்கின்றது.
👇👇👇 இதனை click செய்வதனூடாக Negombo South International School முகநூல் பக்கத்தின் பதிவை பார்க்கலாம்
Comments