நவமணி & Utv Sri Lanka ஊடகவியளாலர் நீர்கொழும்பு விசேட நிருபர் முஸாதிக் முஜீபின் தியாகத்திருநாள் வ
- Musadeek Mujeeb
- Aug 21, 2018
- 1 min read

சகோதர, சகோதரி அனைவருக்கும், எனது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சகனுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!
இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே… ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் எமது உறவுகள் அத்தனை பேருக்கும் அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள்வானாக!
இதுவரை ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் போன அனைவருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!
Comments