கத்தாரில் நிலவும் மூடுபணிக் காலநிலை! வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கை!
- Journalist Mujeeb
- Jan 3, 2019
- 1 min read

—- முஸாதிக் முஜீப் —
கத்தாரில் தற்போது நிலவும் குளிர் காலைநிலை மற்றும் காலை நேரத்தில் நிலவும் மூடுபணி காலநிலை போன்றவற்றின் போது வாகன ஓட்டுநர்கள் மேலதிக முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஹமத் வைத்தியசாலையின் காயங்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக Dr Rafael Consunji, அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, மூடுபணி மற்றும் தெளிவற்ற தன்மைகளால் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வாகன விபத்துக்கள் கூட நடைபெற சாத்தியம் உள்ளது. தெளிவற்ற தன்மைக் காலநிலை நிலவும் போது பெரும்பாலான சாரதிகள் hazard விளக்குகளைப் பாவிக்கின்றனர். இது தவறாகும். இதற்கு பதிலாக low beam or Fog விளக்குகளைப் பாவிக்கும் படி Dr Rafael Consunji, அவர்கள் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வாகன ஓட்டுநர்கள், தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களுக்கிடையில் சாதாரண நாட்களில் விடும் இடைவெளிகளை விட அதிகளவு இடைவெளிகளை விட்டு பயணிக்குமாறும் கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Comments