நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் 2019 ற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள்
- Journalist Mujeeb
- Feb 8, 2019
- 1 min read

--->> நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் <<---
நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் நேற்று 7 ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் அதிபர் எம் இர்ஸாட் தலைமையில் நடைபெற்றது.
இதில் பரகத்,ஹிக்மத்,ரஹ்மத்,இஸ்ஸத் ஆகிய இல்லங்களுக்கிடையிலான இந்த போட்டிகளில் பரகத் இல்லம் முதலாம் இடத்தையும் ஹிக்மத் இல்லம் இரண்டாம் இடத்தையும் இஸ்ஸத் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றதுடன் ரஹ்மத் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.






இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக வலையக் கல்விப் பணிப்பாளர் Mr.K.A.C.பெர்னான்டோ மற்றும் பிரதி வலையக் கல்விப் பணிப்பாளர் Mr.B.C.P.பெர்னான்டோ, Mrs A.S.M.S.துஸரி மற்றும் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி அவர்களும் கௌரவ அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினர் Mr.M.ஷாபி றஹீம், நீர்கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் Mr.M A.Z.பரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே வேளை பெண் மாணவிகளுக்கான பிரத்தியேடமான போட்டிகள் முதல் நாளான 6 ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.







நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி வரலாற்றில் அதிக வருடகாலமாக பரக்கத் இல்லமே முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டது மாத்திரமன்றி இம்முறையும் முதலாவது இடத்தை பெற்று மகுடம் சூட்டியுள்ளது விசேட அம்சமாகும்.
Comments