top of page

நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச்சங்கத்தின் வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் விழிப்பூட்டலும் கருத்தர

  • Writer: Journalist Mujeeb
    Journalist Mujeeb
  • Apr 8, 2019
  • 1 min read

நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச்சங்கம் (NPWA) அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கல்விக்குழு வின் (ACJU) வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்த ‘வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் விழிப்பூட்டலும்’ என்ற தொனிப்பொருளில் ஓர் கருத்தரங்கு Carrier Guidance Workshop 07/04/2019 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்ச்சியானது தேசிய தொழில் பயிலுனர், தொழில் வழிகாட்டல் நிறுவனம், ஜனாதிபதி செயலகத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து தலையங்கத்தையும் உள்ளடக்கியே நடைபெற்றது. 🕳 உளவியல் தகுதி காணும் முறை மாணவர்களின் தகமையை இனம் காணுதல் 🕳 மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில்துறைக்கான விழிப்பூட்டும் வழிகாட்டலும் 🕳 தொழில்நுட்பக் கல்வியும் அதற்கான நிறுவனங்களும் 🕳உயர்தர கற்கை நெறிக்குரிய வகைகளும் அதன் தெரிவுகளும் ஆகியன............ இக்கருத்தரங்கிற்கு கீழ்வரும் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பங்கு பெற்றனர் 🕳 _AL Hilal central college_ 🕳 _AL Falah college_ 🕳 _Haris Chandra college_ 🕳 Vijayarathnam Central college 🕳 _Wisdom college_ 🕳 _South international school_ 🕳 _Seylan international school_ 🕳 _Mukarrama International school_ 🕳 _Kattuwa school_ 🕳 _Dalupatha school 115க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர் அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு சமூகமளித்த சகலமாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

NPWA ஊடகப்பிரிவு


Comments


Recent Posts

இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சுதந்திர   ஊடகவியளாலர்  முஸாதிக் முஜீப்யின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்
Copyright © 2018 Musadeek Mujeeb                                   musadeekmujeeb@gmail.com - All Rights Reserved                                     
bottom of page