கத்தார் விசா மையங்கள் இலவச மொபைல் சிம் கார்டுகளை வழங்கு உள்ளது
- Journalist Mujeeb
- Apr 9, 2019
- 1 min read

இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல முக்கிய தொழிலாளர்கள் ஏற்றுமதி நாடுகளில் செயல்பட்டு வருகின்ற கத்தார் வீசா மையங்கள், புதிதாக இணையும் தொழிலாளர்கள் தங்களது கத்தார் பயணத்தின் போது குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதற்காக 30 கத்தார் ரியால்கள் அடங்கிய புதிய சிம் கார்டுகளை வழங்கவுள்ளது. "வழங்கப்பட்ட சிம் கார்டுகளின் மொபைல் எண் QVC களில் கையொப்பமிடப்பட்ட பணி ஒப்பந்தங்களின் ஆவணங்களுக்கு சேர்க்கப்படும்" என்று நிர்வாக மேம்பாட்டு, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சின் தொழிலாளர் நிபுணர் மற்றும் ஆலோசகர் முகமது அலி அல் மீர் தெரிவித்தார். ஒப்பந்தத்தின் பிரதிகள் நிர்வாக அபிவிருத்தி தொழிற்கல்வி மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் தொழில் வழங்குனர் ஆகியோரனால் பார்வையிட முடியுமாதலால் தேவைப்படும் போதெல்லாம் தொழிலாளர்களை அழைக்க உதவுகிறது. "சிம் கார்டு QR30 சமநிலை இருக்கும், எனவே புதிய தொழிலாளிகள் தனது குடும்பத்தினர், தொழில் வழங்குனர் அல்லது அமைச்சகத்துடன் பேச முடியும்" என்று அல் மீர் கூறினார். இதன் மூலம் வந்த அனைத்து தொழிலாளர்களும் பயனடைவார்கள், இது தொழிலாளியின் பெயரில் பதிவு செய்யப்படும். தொழிலாளர்கள் இங்கே வருகையில் கத்தார் நாட்டில் அவர்களுக்குரிய வதிவிட அனுமதி அட்டைகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். "புதிய நடைமுறைகளின் கீழ் அடுத்தடுத்த கட்டங்களில், சுகாதார அட்டை மற்றும் வங்கி அட்டை போன்றவைகளும் QVC களில் வழங்கப்பட வாய்ப்புள்ளது" என்று அல் மீர் தெரிவித்தார்.
Yorumlar