நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கம் கட்டார் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2019
- Musadeek Mujeeb
- Apr 20, 2019
- 1 min read

நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் முஹம்மத் அஷ்மீர் தலைமையில் நேற்று 19ம் திகதி வெள்ளிக்கிழமை சுமார் மாலை 4 மணியளவில் றேகா உணவகத்தில் நடைபெற்றது. இதன் போது சிறப்பு அதிதியாக இலங்கையிலிருந்து வருகைதந்த அஷ்ஷெய்க் அம்ஹர் மொளலவியும் கலந்து சிறப்பித்தது மட்டுமன்றி இவர் விஷேட சொற்பொழிவையும் நிகழ்த்திச்சென்றார். நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதியில் வரிய கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக அமைக்கப்பட்ட இச்சங்கம் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டது மட்டுமன்றி, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், எதிர்காலத்தில் நடைமுறைப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இச்சங்கத்தின் செயலாளரால் விவரிக்கப்பட்டது. கல்வி உதவித்திட்டம், கல்வி-தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள்,மின்னிணைப்பு, குடிநீர் வசதி, வீடு புணர்நிர்மாணம், விதவைகளுக்கான தொழில்வாய்ப்பு உதவிகள், ரமழான் கால இப்தார் என 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியில் 146 செயற்திட்டங்கள் முடிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இன்னும் 5 செயற்திட்டங்கள் நிலுவையில் உள்ளதாகவும் 20 செயற்திட்டங்கள் குழு ஆலோசகரால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந் நீர்கொழும்பு -பெரியமுல்லை நலன்புரிச்சங்கம் கட்டாரில் மட்டுமன்றி சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், , ஐரோப்பிய-அவுஸ்திரேலியா என பல கிளைகளாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Comments