CWF - QATAR யின் அன்பார்ந்த வேண்டுகோள்
- Journalist Mujeeb
- Apr 21, 2019
- 1 min read

கத்தார் வாழ் இலங்கையர் சார்பாக இலங்கையின் வன்செயல்களைக் கண்டிக்கும் CWF-Qatar வதந்திகளைக் தவிர்த்து கயவனை கண்டறிவோம் என்கிறது அன்பின் இலங்கை உறவுகளே எமது நாட்டில் நிலவும் இன்றைய அமைதியற்ற சூழ்நிலை மிகவும் கவலைக்குறியதாகவும் மக்கள் மத்தியில் நிம்மதியற்றதாகவும் காணப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதைப்போல் நாட்டின் பல பாக்ங்களில் வெடி வைத்து உயிர்களைப் பறித்த இந்த வன்செயலை கத்தார் வாழ் சகல இலங்கையர் சார்பாகவும் CWF-Qatar தனது வன்மையான கண்டனத்தை தெறிவித்துக்கொள்கிறது 2009 ஆம் ஆண்டுடன் முற்றுப்பெற்றிருந்த இந்த நிம்மதியற்ற சூழல் மீண்டும் எழுந்திட வேண்டாமே நாம் வாழும் இக்குறுகிய வாழ்வை எம் சகோதரர்களுடன் ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாய் கழிக்க அரசே ஒத்துழைப்பீர் சகோதரர்களே உண்மைத் தன்மையை அறியாமல் வதந்திகளைக் கிளப்பி மக்கள் மனதில் நஞ்சை உண்டாக்க வழிவகுக்காது நாம் ஒற்றுமையாய் செயற்பட்டு இந்த சதிகாரருக்கு ஓர் பாடத்தை புகட்டலாமே...
תגובות