top of page

நாட்டில் இடம் பெற்ற தொடர்குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளர் நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்  கண்டனம

  • Writer: Journalist Mujeeb
    Journalist Mujeeb
  • Apr 21, 2019
  • 1 min read

ஊடகவியலாளர் நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் கிறிஸ்தவ சகோதரர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான இன்று 21.04.2019 நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட தொடர்குண்டுத்தாக்குதல்களை ஊடகவியலாளர் நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் கத்தார் வாழ் இலங்கையர்கள் மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

குறிப்பாக அவர்களது மதஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதானது மிகவும் வேதனையளிக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இந்த தாக்குதல்கள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு மிக விரைவில் முன்னேடுக்க வேண்டும் என்றும் கத்தார் வாழ் இலங்கையர்கள் சார்பாகவும் ஊடகவியலாளர் சார்பாகவும் வேண்டிக்கொள்கின்றோம். வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும் வேண்டிக்கொள்கின்றோம். மேலும், சமூக ஊடகங்களில் வலம் வருகின்ற வதந்திகளை பரப்புவதிலிருந்து சகலரும் தவிர்ந்து நடக்குமாறும் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம். அதே நேரம் அரசாங்கமும் பாதுகாப்புத்துறையும் மேற்கொள்ளும் விசரனைகளுக்கு மக்களும் தத்தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம். 


Comments


Recent Posts

இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சுதந்திர   ஊடகவியளாலர்  முஸாதிக் முஜீப்யின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்
Copyright © 2018 Musadeek Mujeeb                                   musadeekmujeeb@gmail.com - All Rights Reserved                                     
bottom of page