நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நட்டஈடு - பிரதமர் ரணில்
- Journalist Mujeeb
- May 6, 2019
- 1 min read

நீர்கொழும்பில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மையால், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். குறித்த சேதங்கள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு, அதற்கான நட்டஈட்டை வழங்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரதமர் யோசனை வழங்கியுள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் சேதங்களுக்கான அலுவலகம் ஊடாக சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Comments